Friday, December 21, 2007

கவனம்

கண்களை இமைக்கும் பெண்ணே - கேள்
உன் ஒவ்வொரு இமைத்தலும் காயப்படுத்தும்
எண்ணிக்கையில்லா ஆடவர்
மனங்களை.

Monday, November 05, 2007

சரி நிகர்


இரு கைகள் தாங்க வேண்டிய உன்னை..
ஒரு கைவிட்டாலும் உன் நிலை தடுமாறும்.

Wednesday, July 11, 2007

கசந்தவை இனித்தவை


அந்த நெடும் சாலையில் அன்று
நாம் பரிமாறிக்கொண்டவை
எவருக்கு கசந்ததோ தெரியவில்லை
ஆனால் நமக்கு
இனித்தவை அவை

Friday, June 29, 2007

காதலே மாற்றும்


உன் கருப்பு வெள்ளை கனவுகள்

கலராய் மாற காதல் ஒன்றே போதும்

காத்திரு அது தானாய் மாறும்

Friday, May 11, 2007

பயம் பாறா , பறந்தடி



அந்தரத்தில் பறந்து பந்தடிக்கும் பயலே

நம் நாட்டுக்கு வந்திடாதே

கையுடையும் காலுடையும்

என்று பயபிடுத்தி விடுவார்

பறப்பு



நீ செய்யும் பறப்பு முயற்ச்சி

பாரிய அளவில் பலிக்காவிடினும்

பயங்காட்டட்டும் எதிரிக்கு

Friday, January 12, 2007

இது என்ன அதிசயம்


உன்னைக் கண்டதும் - என்
கண்கள் இமைக்க மறுக்கின்றன என்கிறாய்.
அடி போ இது என்ன அதிசயம்
உன்னைக்கண்டதும் என் இதயமே
துடிப்பதில்லை.

தொடரும் காத்திருப்பு...


எனக்கு அழகிருந்தும் என்ன செய்ய
தனிமையிலே அழத்தான் முடிகிறது,
எதிர் பார்த்திருப்பதுபோல் - ஒருத்தி
வந்திடுவாள் என காத்திருப்பு தொடர்கிறது.

நாம் தீட்டிய ஓவியம்


நீ வரைந்த கற்பனை காதலன் போல் நானும்
நான் வரைந்த சொப்பன காதலிபோல் நீயும்
இருப்பதால் பற்றிக்கொண்டன நம் கைகள்
வாழ்க்கைப்பாதையில் பயணிப்பதற்காய்....

ச்சீ... பார்


அழகிய ஆற்றங்கரை ஓரத்திலே - உள்ள
ஆலமரம் மேல் நாம் அழகிய வீடமைத்து
சத்தமில்லாமல் பரிமாறும் காதல் முத்தங்களை
சந்திரனும் எட்டிப்பார்க்கிறான் பார். ச்சீ.........

தனிமையானவள்

ஆயிரம் தோழிகள் எனக்கு உண்டு் - எனினும்
நான் சிவப்பு ரோஜா கொடுத்த முதல் தோழி நீ.