Friday, January 12, 2007

இது என்ன அதிசயம்


உன்னைக் கண்டதும் - என்
கண்கள் இமைக்க மறுக்கின்றன என்கிறாய்.
அடி போ இது என்ன அதிசயம்
உன்னைக்கண்டதும் என் இதயமே
துடிப்பதில்லை.

தொடரும் காத்திருப்பு...


எனக்கு அழகிருந்தும் என்ன செய்ய
தனிமையிலே அழத்தான் முடிகிறது,
எதிர் பார்த்திருப்பதுபோல் - ஒருத்தி
வந்திடுவாள் என காத்திருப்பு தொடர்கிறது.

நாம் தீட்டிய ஓவியம்


நீ வரைந்த கற்பனை காதலன் போல் நானும்
நான் வரைந்த சொப்பன காதலிபோல் நீயும்
இருப்பதால் பற்றிக்கொண்டன நம் கைகள்
வாழ்க்கைப்பாதையில் பயணிப்பதற்காய்....

ச்சீ... பார்


அழகிய ஆற்றங்கரை ஓரத்திலே - உள்ள
ஆலமரம் மேல் நாம் அழகிய வீடமைத்து
சத்தமில்லாமல் பரிமாறும் காதல் முத்தங்களை
சந்திரனும் எட்டிப்பார்க்கிறான் பார். ச்சீ.........

தனிமையானவள்

ஆயிரம் தோழிகள் எனக்கு உண்டு் - எனினும்
நான் சிவப்பு ரோஜா கொடுத்த முதல் தோழி நீ.

Saturday, June 24, 2006

தேவதையாய்...



என் கனவுகளுக்கும் உயிர் கொடுத்தால்...
என்காதலியும் இப்படித்தான்.
தேவதையாய் !!!

Thursday, June 22, 2006

முகத்திரை


மனிதா நீ வேடங்கள் போட்டாலும்
பல்வேறு மாயங்கள் செய்தாலும்
ஒர் நாள் உன் முகத்திரையும்
இப்படித்தான்.....

Wednesday, June 21, 2006

காதலாகி....


இருண்ட மனதிலும்
பிரகாசமாகப்பூக்கும்
சிவப்புரோஜா காதல்

தனிமையிலே.....

"நன்பா" நீ என்னருகில் இல்லாத கணப்பொழுதுகள்
கறுத்திருக்கிறது என் காதல் உலகம். :-((