Sunday, November 02, 2008

பாசம் பயமறியாது.

பண்பாய் பழகும் நம்மை பார்த்து 
சொல்லட்டும் மனிதம் 
பாசம் பயமறியாது என...

நாளைய விந்தை உலகு.


நாளைய உலகின் மனிதர்களில் 
ஆங்காங்கே விந்தையான 
குளோனிங் மனிதன் இப்படியும்........

Monday, May 26, 2008

கவனம்


பற்றைகளுக்குள் பூப்பறித்து விளையாடுகிறாயா... பெண்ணே
நீ நிற்கும் இடம் இலங்கையாயிருந்தால்... கவனம்
கண்ணிகளில் உன் கால்கள் காணாமல் போகலாம்.

Sunday, May 11, 2008

மண் தின்னும் மனிதப்புழுக்கள்

நான்கு நாள் பொருத்துப்பார்..
உனக்கு உதவ நாதியில்லையா!
மன்னித்து விடு மண்தான் உனக்கிரை
அதிலும் உனக்கு இஸ்டமில்லையா?
அப்போ நீதான் மண்னுக்கிரை.

Thursday, May 01, 2008

பெண்

பெண்ணே உன் பாதம் தொட - பார்
அந்த அலைகளும் பறந்தோடி வருகின்றன.

Friday, April 25, 2008

ஈர்ப்பு (காதலல்ல)

காதலியே, அன்று உனை பார்த்தே இக் கண் வரைந்தேன்
இன்று இக் கண்ணை கையில் வைத்துக்கொண்டே
என் காதலியாய் ஒருத்தியை தேடுகிறேன்.

Saturday, April 12, 2008

நிலை

உன் ஒவ்வொரு அங்க அசைவும்....
அவர்களுக்கு, காட்சியாய் கலையாய் காமமாய்
உனக்கு மட்டும் அது பணமாய் பசியாய் பாசமாய்

Friday, March 21, 2008

"நீ"தான் வேண்டும் எனக்கு...


ஏன் இப்படி கேட்கிறாய் என்னிடம்..
அப்பப்போ வரும் அம்பா,அம்மா பிடிக்குமா எனக்கு..
எப்போதும் என்னுடனே இருக்கும் உன்னைப்பிடிக்குமா எனக்கு..
நிச்சயமாய் உன்னைதான் பிடிக்கும் எனக்கு..
"நீ"தான் வேண்டும் எனக்கு...

Thursday, February 28, 2008

பார்வைகள் பலவிதம்



நன்பனே, நானும் நீயும் கிசு கிசுக்கும்
இந்த காட்சிதனை எவரேனும் கண்ணுற்றால்
நாளை முதல் நம்மை பற்றி கிசு கிசுக்கும் ஊர்.

Friday, February 22, 2008

குட்டி
















படப்போகும் துன்பங்கள் தெரியாமல் போடும் ஒரு குட்டித்தூக்கம்.

Tuesday, January 22, 2008

பயணம்

















நானும் நீயும் செய்த

துவிச்சக்கரவண்டி பயணம் கண்டு

குழம்பியது வண்டி - நாம்

காதலர்களா இல்லை நன்பர்களா என்று

Friday, December 21, 2007

கவனம்

கண்களை இமைக்கும் பெண்ணே - கேள்
உன் ஒவ்வொரு இமைத்தலும் காயப்படுத்தும்
எண்ணிக்கையில்லா ஆடவர்
மனங்களை.

Monday, November 05, 2007

சரி நிகர்


இரு கைகள் தாங்க வேண்டிய உன்னை..
ஒரு கைவிட்டாலும் உன் நிலை தடுமாறும்.

Wednesday, July 11, 2007

கசந்தவை இனித்தவை


அந்த நெடும் சாலையில் அன்று
நாம் பரிமாறிக்கொண்டவை
எவருக்கு கசந்ததோ தெரியவில்லை
ஆனால் நமக்கு
இனித்தவை அவை

Friday, June 29, 2007

காதலே மாற்றும்


உன் கருப்பு வெள்ளை கனவுகள்

கலராய் மாற காதல் ஒன்றே போதும்

காத்திரு அது தானாய் மாறும்